மரியாதை (திரைப்பட விமர்சனம்)

இயக்குனர் விக்ரமனின் படங்கள் என்றாலே விரும்பி பார்க்கும் செண்டிமென்ட் ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதால் படம் வெளியான அன்று இரவே படத்திற்கு சென்றுவிட்டேன், திரையரங்கம் நிரம்பியிருந்தது குடும்பத்துடன் வந்திருந்தவர்களே அதிகம் இருந்தனர்,
அப்பாவைத்த பிச்சை என்றபெயர் பிடிக்காததால் வேறு பெயர் சொல்லி கூப்பிட சொல்கிறான்,சிறுவன் , அவன் விருப்பப்படி அவன் சொன்ன பெயரிலேயே பள்ளியிலும் சேர்க்கிறார் அப்பா, நண்பர்களுடன் சேர்ந்து மகன் சிகரெட் பிடிப்பது தெரியவரும் போது என்மகன் அப்படி செய்யமாட்டான் என் று நம்பிக்கையோடு கூறுகிறார் அப்பா, . அதைக்கேட்ட மகன் அப்பாவின் நம்பிக்கைகாகவே புகை பழக்கத்தை விடுகிறான், அடுத்த நாள் தேர்வை வைத்துக்கொண்டு இரவு சினிமா பார்ர்கும் ஆர்வத்தில் இருக்கும் மகனிடம் சினிமாவை நினைத்துக்கொண்டே சரியாக படிக்காமல் இருப்பதைவிட போய் பார்த்துவிட்டு வந்து மனம் ஒன்றி படி என பணம் கொடுத்து அனுப்புகிறார் அப்பா, மேல் படிப்புக்கு முயற்சிக்கும் போதும் உனக்கு என்ன விருப்பமோ அதையே படி என மகனின் விருப்பம்போல் முடிவெடுக்க அனுமதிக்கிறார் அப்பா,
"குழந்தைகளை அதன் போக்கிலேயே வளர்க்க வேண்டும் நம் கண்டிப்புகளையும் விருப்பங்களையும் அவர்கள் மேல் திணிக்கக்கூடாது , குழந்தைகள் தவறுகள் செய்தால் அன்பாக சொல்லி திருத்துங்கள் தண்டிக்காதீர்கள்" என்ற கருத்தை எடுத்துக்கொண்டு அப்பா மகன் செண்டிமண்ட் கதையை தன்னுடைய திரைக்கதை பானியில் வெகு சாமர்த்தியமாக நகர்த்திச் செல்கிறார் இயக்குநர் விக்கிரமன்
சாரணமாக வாழும் விஜயகாந்தின் ஏழை குடும்பத்தில் விருந்தாளியாக வந்து தங்கும் மீராஜஸ்மின் விஜயகாந்தை காதலால் சீண்டி பார்க்கிறார் கோபத்தோடு விலகிப்போகிறார் விஜயகாந்த், காரணம் பிளாஸ்பேக்கில் வில்லன் கூட்டணியால் நடிக்கவரும் மீனாவின் பொய்யான காதலை உண்மையென நம்பி அவருடைய கடன் பிரச்சனையை தீர்க்க 5லட்ச ரூபாய்க்காக பத்திரத்தை படிக்காமல் கையெழுத்திட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள 150 ஏக்கர் விவசாய நிலத்தை இழந்துவிடுகிறார், இதானால் பணக்கார குடும்பம் ஏழை குடும்பமாகிறது, எப்படி மீண்டும் நல்ல நிலைக்கு வருகிறார் தன் அப்பாவின் பெயரை உயர்த்துகிறார் என்பதே படத்தின் கதை,
அப்பா விஜயகாந்தின் நடிப்பும் அம்மவாக வரும் அம்பிகாவின் நடிப்பும் அளவாக சரியாக பொருந்தி இருக்கிறது, ரமேஷ் கண்ணாவையும் ,அம்பிகாவின் சமையலையும் கிண்டலடித்து அதை மையப்படுத்தியே காமெடியை நகர்த்தியிருக்கிறார்கள், சொல்லி சிரிக்கும்படி இல்லாவிட்டாலும் காட்சிகளை நகர்த்த போதுமானதாக இருக்கிறது, விஜயகாந்தின் தங்கையின் திருமணமும் , அதன் வரதட்சனை பிரச்சனையும் வழக்கமான விக்கிரமன் பாணி, பஞ்ச் டயலாக், திரையை பார்த்து ஆவேசமாக வசனம் பேசுவது என தேவையற்றவை எதையும் திணிக்காமல் நிறைவாக வந்து செல்கிறார் மகன் விஜயகாந்த்(தோற்றத்தில் மட்டும் கொஞ்சம் வயது முதிர்ச்சி தெரிகிறது)
விக்கிரமன் படங்களில் முன்னேற்றத்திற்கு உதராணமாக வரும் , "பெரிய பாடகி, பஸ் கம்பனி, ஊறுகாய் கம்பனி , கிரிக்கெட்வீரர் ,வரிசையில் இந்த படத்தில் "தரிசு நிலத்தில் கிரீன்ஹவுஸ் முறையில் பெரிய அளவில் ரோஜாதோட்டம் அமைத்து பூக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்தல் " என்ற நம்பும் விதமாக சொல்லியிருப்பது ரசிக்கவைக்கிறது,
விஜயகாந்தின் வீட்டில் மீரா ஜான்மின் தங்குவது ஏன், விஜயகாந்தை சுற்றிவருவது ஏன்? போன்ற கேள்விகளுக்கு பிளாஸ்பேக்கில் மீரா மீனாவின்தோழி என்றும் மீனாவின், போலி காதலை எதிர்த்து அவரை மீண்டும் சாதிக்கவைப்பென் என்று சவால் விட்டு விஜயகாந்திடம் வருவதாக் சொல்லியிருக்கிறார் இயக்குநர்,
பாடல்கள் கேட்பதற்கு இனிமையாகவே இருக்கின்றன "யார் பார்த்தது........." பாடலும் "இன்பமே உந்தன் பேர்..........." நல்ல ஹிட், கடைசி பாடல் (தேவதை தேசத்தில்) படத்தின் வேகத்தை குறைக்கிறது, விஜய் ஆண்டனியின் பின்னனி இசையும் ஆண்ட்ரூவின் ஒளிப்பதிவும் படத்திற்கு அழகு சேர்க்கின்றன
யார் என்ன பேசினாலும் அதை மற்றவர்கள் ஒட்டு கேட்டு உருகுவது, எல்லோரும் அதிக உதவிமனப்பான்மை கொண்டவர்களாகவும் நல்லவர்களுமாகவே இருப்பது , போன்றவைகள் நடைமுறை வாழ்க்கைக்கு லாஜிக் இடித்தாலும் பாசிட்டிவ் சிந்தனைகளை சொல்லுவதற்கு பொருத்தமானதாகவே இருக்கிறது
மனைவி என்றால் நன்றாக சமைத்துப்போடவேண்டும் என்ற கட்டாயமில்லை, அதற்கு வேலைக்காரியே போதுமே சுக துக்கங்களில் சரிசமமாய் பங்கெடுத்தாலே போதும்" என்பது போன்ற பல இடங்களில் வரும் பாசிட்டிவ் வசனங்களில் விக்ரமன் உயர்ந்து நிற்கிறார், குறிப்பாகா கடைசி காட்சியில் சாதனையாளராகி மகன் விஜயகாந்த் பேசும் வசனங்கள்,
"இரட்டை அர்த்த வசனங்கள்," ரத்தம் தெறிக்கும் வன்முறை, "குலுக்கல் குத்துப்பாட்டுகள்" என எதுவும் இல்லாமல் குடும்பத்துடன்அமர்ந்து பார்க்கவும், நம்முள் இருக்கும் பாசிட்டிவ் சிந்தனைகளை தூண்டிவிடவும் இதுபோன்ற படங்கள் வ்ரவேற்கத் தகுந்தவை! விக்கிரமன் போன்றவர்கள் பாராட்டத்தகுந்தவர்கள்,
"மரியாதை"தாராளமாக தரலாம்













